குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று 81-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசுத்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “குடியரசுத்தலைவர் பிரணாப்புக்கு வாழ்த்துகள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இவர் உத்வேகமாக விளங்குகிறார். நாட்டுக்கு அவர் ஆற்றி வரும் பணி களுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.