இந்தியா

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் வெறிநாய்கள் கடித்து பலி

செய்திப்பிரிவு

வெறி நாய்கள் கடித்ததில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திங்கள் கிழமை நடந்தது.

விசாகப்பட்டினம் மாவட்டம், கொத்த வெங்கோஜி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பல ரெட்டி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலராக பணிபுரிகிறார். இவர் தனது மனைவி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட மேரி(17) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் திங்கள்கிழமை வேலைக்கு சென்றனர். அப்போது மேரி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் 6 வெறி நாய்கள் வீட்டில் புகுந்து மேரியை கடித்து குதறி உள்ளது. வாய் பேச முடியாத மேரி சத்தம் போடவும் முடிய வில்லை. உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT