மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி

 
இந்தியா

மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 91% வாக்குகள் பதிவு: பாஜக ரியாக்‌ஷன் என்ன?

வேட்டையன்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 91 சதவீத வாக்குகள் பதிவாகின. இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 152 தொகு​தி​களுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர். 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அது முதலே வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். மாலை 6 மணி நிலவரப்படி அங்கு 91.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். “மேற்கு வங்கத்தில் மாற்றத்துக்கான தேர்தல் இது. அதனால் தான் வாக்குப்பதிவு சதவீதம் இந்த முறை அதிகரித்துள்ளது. ரவுடிகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த ராம் ராஜ்ஜியம் அமையவுள்ளது” என அவர் தெரிவித்தார்.

“தேர்தல் ஆணையம் ஆக்டிவாக களத்தில் செயல்படுகிறது. பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதோடு மக்களும் போதுமான விழிப்புணர்வு பெற்றுள்ளனர். 91 சதவீதத்துக்கும் கூடுதலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது வாக்காளர்களின் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.

மேற்கு வங்கத்தில் தொழில், வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்புக்கு உள்ளிட்டவை முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர்” என்று மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT