இந்தியா

திருப்பதியில் ஜன.8-ல் சொர்க்க வாசல் திறப்பு

செய்திப்பிரிவு

திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அன்று அதிகாலை 4 மணிக்கே சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

வைணவத் தலங்களில் வரும் ஜனவரி 8-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண் டாடப்படவுள்ளது. பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப் பாக பக்தர்கள் வசதிக்காக அன்று அதிகாலை 4 மணிக்கே சொர்க்க வாசல் திறக்கப்படும் என தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி அன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவத் தலங்களிலும் அதி காலையில் சொர்க்க வாசல் திறக் கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT