கோப்புப்படம் 
இந்தியா

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்: மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க உத்தரவிடக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயா தாக்குர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறும்போது, "சமூக ஆர்வலர் முக்கியமான பிரச்சினையை எழுப்பி உள்ளார். இந்த விஷயத்தில் நீதிமன்றத்துக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உதவ வேண்டும்.

இதுதொடர்பாக பதில் மனுவை மத்திய அரசும், மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது" என்றனர்.

SCROLL FOR NEXT