இந்தியா

சாரதா சீட்டு நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையில் போலீஸ் அதிகாரிகள்

செய்திப்பிரிவு

சாரதா சீட்டு நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக மேற்குவங்க போலீஸ் அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறியிருப்பதாவது: சாரதா சீட்டு நிறுவன ஊழல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு மேற்குவங்க காவல் துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தபோதும் அவை இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, சில ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

அவ்வாறு முக்கியமான ஆவணங்களை போலீஸ் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் அழித்தது தெரியவந்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவோம்.

இந்த ஊழலில் தொடர்புடைய சில முக்கிய நபர்கள், காவல் துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே இதையும் சிபிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT