இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் கடும் பனிமூட்டம்: சாலை விபத்தில் சிக்கி 7 பேர் பலி

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 7 பேர் பலியாயினர். 14 பேர் காயமடைந்தனர்.

வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடுங்குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. சாலைகளில் பல கி.மீ தூரத்துக்கு பனிமூட்டம் போர்த்தியிருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். போதிய வெளிச்சமின்மை காரண மாக எதிர் எதிரே வரும் வாகனங் கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன..

இந்நிலையில் மாநிலத்தின் பதோஹி என்ற பகுதியில் நேற்று பனிமூட்டத்தால் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இதே போல் மாவு மாவட்டத்தில் ஹல்தார்பூர் என்ற இடத்தில் ஜீப் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. வரும் நாட்களிலும் இதே நிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT