இந்தியா

டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ராஜினாமா

சித்தார்த்த ராய்

டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டெல்லி துணை நிலை ஆளுநராக, ஆளும் ஆத் ஆத்மி கட்சிக்கு எதிராக மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வந்த நஜீப் ஜங் ராஜினாமா டெல்லி வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அவர், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி மக்கள் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சியில் ‘மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தது ஆட்சியை சுமுகமாக நடத்த உதவியது’ என்று தெரிவித்துள்ளார் நஜீப் ஜங்.

ஜூலை 2013-ல் தேஜேந்திர கன்னாவுக்குப் பிறகு டெல்லி துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்றார் நஜீப் ஜங்.

SCROLL FOR NEXT