இந்தியா

ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை

பிடிஐ

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட எல்லையில் உள்ள பமியால் செக்டார் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திண்டா எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே பாகிஸ்தான் பகுதியில் இருந்து தீவிரவாதி ஒருவன் இருநாட்டு வேலி அருகே வந்தான்.

இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்தபோது எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி பலியானான். சம்பவம் நடந்த இடம் பஞ்சாப் ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT