பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழுவதும் பொதுமக்கள் வங்கிகள் முன் வரிசையில் காத்திருக்கும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பழைய ரூபாய் நோட்டுகள் அதிக விலைக்கு வாங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புர்ராபஜார் பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் தான் பழைய ரூபாய் நோட்டுகள் இப்படி அதிக விலைக்கு வாங்கப்படு கின்றன. அதிலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முறையே ரூ.550, ரூ.1100 விலைக்கு வாங்கப்படு கிறது. இதனால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். ஆண்டு இறுதிக்குள் ரொக்கப் பரிவர்த்தனை கையிருப்பை அதிக அளவில் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்நிறுவனம் இப்படி பழைய ரூபாய் நோட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.