இந்தியா

பதவி மூப்பு அடிப்படையில் தேர்வு நடக்கவில்லை: ராணுவ தளபதி நியமனத்தில் விதிமீறல்- காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதிய ராணுவ தளபதி நியமனத் தில் மத்திய அரசு விதிகளை மீறியுள்ளது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:

கிழக்கு பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பிரவீண் பாஷி, தெற்கு பிராந்திய தலைமை கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிஷ் ஆகியோர் மூத்த ராணுவ அதிகாரிகள் ஆவார்.

ஆனால் பதவிமூப்பில் 4-வது இடத்தில் உள்ள பிபின் ராவத்தை தலைமைத் தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. அவரது திறமை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பவில்லை. பதவிமூப்பின் அடிப்படை யிலேயே தலைமைத் தளபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பது நடைமுறை விதி. அந்த விதியை மீறியது ஏன்?

தலைமை ஊழல் கண் காணிப்பு ஆணையர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நியமனத்தில் மத்திய அரசு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ராணுவத் தலைமைத் தளபதி நியமனத்திலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா கூறியதாவது:

ஒட்டுமொத்த நாட்டுக்கும் ராணுவம் சொந்தமானது. எனவே எந்த அடிப்படையில் தலைமைத் தளபதி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறித்து மத்திய அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். உயர் பதவிகள் நிய மனத்தில் மத்திய அரசு தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரு கிறது. இதுபோன்ற நடவடிக்கை கள் நாட்டின் நலனுக்கும் ஜனநாய கத்துக்கும் விரோதமானது.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT