இந்தியா

வங்கி கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் கவலையளிக்கிறது : தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் கருத்து

செய்திப்பிரிவு

வங்கிக் கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் கவலையளிக்கிறது என்று தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் அர்விந்த் குப்தா தெரிவித்துள்ளார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் காலாவதியாகியிருப்பதால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்தப் பின்னணியில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் அர்விந்த் குப்தா கூறியிருப்பதாவது:

சைபர் தாக்குதல் தேசிய அளவில் மிக முக்கிய பிரச்சினை யாக எழுந்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.குறிப்பாக வங்கிக் கணக்கு கள் மீதான சைபர் தாக்குதல் மிகுந்த கவலையளிக்கிறது. அணுஆயுத சைபர் தாக்குதலைவிட வங்கிக் கணக்கு சைபர் தாக்குதல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

சைபர் குற்றவாளிகளை அடை யாளம் காண்பது மிகவும் கடினம். இத்தகைய மோசடிகளைத் தடுக்க வங்கி நிர்வாகங்கள் போதுமான பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்ய வேண்டும். இதன்மூலம் இணையதள வழியிலான பண திருட்டுகளைத் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT