இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணிக்கு 12 மணி நேர பரோல்

பிடிஐ

ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற் பதற்காக 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது.

இந்திராணி முகர்ஜியின் தந்தை உபேந்திரா போரா கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான குவாஹாட்டி செல்வதற்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி இந்திராணி சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்திராணி குவாஹாட்டி செல்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என அவரது மகன் சிபிஐக்கு இ-மெயில் அனுப்பியிருந்தார். அதையும் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ்.மஹாஜன், 12 மணி நேர பரோலில் விடுவிக்க உத்தர விட்டார். மேலும் மும்பைக்கு வெளியே இந்திராணி செல்லக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார். அதன்படி மும்பை பைகுல்லா சிறைச்சாலையில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு இந்திராணி பரோலில் விடுவிக்கப் பட்டார். அங்கிருந்து மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சி களில் அவர் பங்கேற்றார். பின்னர் இரவு 7 மணிக்கு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT