மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் ஓ.இபோபி சிங் தலைமையிலான அரசு புதிதாக 7 மாவட்டங்களை உருவாக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகா மக்கள் அதிகம் வசிக்கும் 4 மாவட்ட தலைநகரங் களில் ஐக்கிய நாகா கவுன்சில் சார் பில் நேற்று பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், சந்தல் மாவட்டத் திலிருந்து பிரிக்கப்பட்ட தெங்னூ பால் என்ற புதிய மாவட்டத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் முதல்வர் ஓ.இபோபி சிங் பங்கேற்றார்.
இதற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக போலீஸார் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு போலீஸ்காரர் பலியா னார். மற்றொரு போலீஸ்காரர் மருத்துவமனைக்கு செல்லும் வழி யில் இறந்தார். இதில் படுகாய மடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல சந்தல் மாவட்டம் போங்யாங் பகுதியில் போலீஸார் மீது தீவிரவாதிகள் இதே முறையில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் கமாண்டோ ஹவில்தர் யெங்கோம் ஜீவன் உயிரிழந்தார்.
பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.