விபத்தில் சிக்கிய கார் 
இந்தியா

புனே - பெங்களூரு நெடுஞ்சாலை நாவலே பாலத்தில் விபத்து: 45+ வாகனங்கள் சேதம்

செய்திப்பிரிவு

புனே: புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 45க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஞாயிறு (நவம்பர் 20) அன்று இந்த விபத்து நடைபெற்றுள்ளது. தற்போது விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலையில் சரிவு அதிகம் இருப்பதும், அதிவேகமாக வரும் வாகனமும் தான் விபத்துக்கு காரணம் என தெரிகிறது. அதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனே தீயணைப்புப் படை மற்றும் புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் மக்கள் தரவுகளின் படி இந்த சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றில் பிரேக் ஃபெயிலர் காரணமாக முன்புறம் சென்ற வாகனங்களை இடித்துள்ளது. அந்த விபத்தின் போது ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக பின்புறம் வந்த வாகனங்களின் டயர் மற்றும் சாலைக்குமான பிடிமானம் இல்லாத காரணத்தால் அவையும் விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

SCROLL FOR NEXT