இந்தியா

போபாலில் நடந்த சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்: பாஜக பாராட்டு; எதிர்க்கட்சிகள் கண்டனம்

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்திய சிறைச் சாலையில் இருந்து நேற்று முன் தினம் 8 ‘சிமி’ தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். அப்போது சிறை தலைமை காவலரைக் கொடூரமாக கொலை செய்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸார் சிறைச்சாலை அருகே ஒரு கிராமத் துக்குள் பதுங்கி இருந்த 8 தீவிர வாதிகளையும் சுற்றிவளைத்து என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் தப்பிச் சென்ற 8 மணி நேரத்துக்குள் அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து நடவடிக்கை எடுத்ததற்கு பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் வெளியிட்ட ‘ட்விட்டர்’ பதிவில், ‘‘சில உண்மைகளை எங்கே பகிரங்கப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தால் தீவிரவாதிகளை போலீஸார் படுகொலை செய் துள்ளனர். எனவே நீதிமன்ற கண் காணிப்புடன் கூடிய தேசிய புல னாய்வு முகமை விசாரணைக்கும், நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘போபால் மத்திய சிறையில் இருந்து 8 சிமி தீவிரவாதிகள் திடீரென தப்பிச் சென்றதும், உடனடியாக அவர் களைக் கண்டுபிடித்து தீவிரவாத தடுப்பு படையினர் கொலை செய் ததும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்த விவகாரத் தில் உண்மையை கண்டறிய குறிப் பிட்ட காலக்கெடுவுடன் கூடிய நீதி விசாரணை தேவை’’ என குறிப்பிட் டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்த அடுக் கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதி களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிறை தலைமை காவலர் ராம்சங்கர் யாதவின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘நமது வீரர்களின் தியாகங்களை அரசியல்வாதிகள் சிலர் உதாசீனப் படுத்தி விடுகின்றனர். வெறும் வாக்குவங்கி அரசியலுக்காக இந்த விவகாரத்தைப் பெரிதாக்க பார்க்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

தலைமைக் காவலர் ராம்சங்கர் யாதவ்

பழுதான ‘சிசிடிவி’

சிமி தீவிரவாதிகள் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிய நேரத்தில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) இயங்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி தீவிரவாதிகள் 8 பேரும் தப்பி இருக்கலாம் என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இதனிடையே 8 சிமி தீவிரவாதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது. கண்காணிப்பு கேமரா பற்றி சிறை அதிகாரிகள் யாரும் வாய் திறக்கவில்லை.

SCROLL FOR NEXT