இந்தியா

ஒடிஸா மாநில சிறுவனுக்கு சாதனை விருது

பிடிஐ

ஒடிஸா மாநிலம், கஞ்சம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹிஞ்சிலி பகுதியில் சோமாப்பூர் திட்டப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் சாஹு, விவசாயிகளுக்குப் பயன்படும் புதுமையான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

விதைப்பு, மருந்து தெளிப்பு, நெல் அறுப்பு போன்ற பல்வேறு பணிகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில் ‘விவசாயிகளுக்கான பரிசு’ என்ற பெயரில், சாஹு தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய கருவி, ஏற்கெனவே கொல்கத்தாவில் நடந்த மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

அவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், வரும் 14-ம் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விழாவில் சாதனைக் குழந்தைக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.

ரூ.10,000 ரொக்கம், ரூ.3,000 மதிப்பில் புத்தகங்கள் வாங்குவதற்கான கூப்பன், ஒரு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை இவ்விருதுடன் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT