இந்தியா

இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 120 பேர் பலி: விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சோனியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி இரங்கல்

*

இந்தூர்- பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் நேற்று அவர் வெளியிட்ட தகவல்: இந்தூர்- பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி, ஏராளமானோர் உயிரிழந்த துன்ப கரமான சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் பலியானவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கி றேன். காயமடைந்தவர்கள் விரை வில் குணமடைய பிரார்த்திக் கிறேன். அமைச்சர் சுரேஷ் பிரபு உடன் பேசியுள்ளேன். அவர் நேரடி யாக நிலைமையை கண்காணித்து வருகிறார் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சோனியா வலியுறுத்தல்

பேரிழப்பை ஏற்படுத்திய இவ் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை முழுமையாக விசாரணை நடத்தி, உரிய நட வடிக்கையை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுமாறு கான்பூர் பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய உதவிகள் கிடைப் பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு, தனது இரங்கல் கடிதத்தை உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நாயக்குக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

நிதிஷ் நிகழ்ச்சிகள் ரத்து

விபத்து தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்காக அவசர உதவி எண்களை அறிவித்துள்ள பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், பாட் னானில் நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிகள் முழுமையாக கிடைப்பதை கண்காணித்து உறுதி செய்வதற்காக மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவை நிதிஷ்குமார் கான்பூருக்கு அனுப்பினார்.

மார்க்சிஸ்ட் அறிக்கை

புல்லட் ரயில்களை அறிமுகப் படுத்துவதில் ஆர்வம் காட்டும் பிரதமரோ, ரயில்வே அமைச்சரோ, இதுபோன்ற விபத்துகளுக்குப் பொறுப்பேற்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அக்கட்சி வெளியிட்ட அறிக் கையில், ‘பயன்பாட்டில் இருக்கும் ரயில்வே கட்டமைப்பில் பொது வான பாதுகாப்பு, பாதுகாப்பு உப கரணங்களைத் தரம் உயர்த்தி மேம்படுத்துவது, சிக்னல் மற்றும் தடங்களை சீரமைத்து முறையாக பராமரிப்பது போன்ற பணிகளுக்கே அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே, புல்லட் ரயில் போன்ற திட்டங்களுக்குச் செல்ல வேண்டும்’ என சுட்டிக்காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT