இந்தியா

ரூ.2,000 நோட்டால் கருப்பு பணம் ஒழியுமா?- ப.சிதம்பரம் கேள்வி

பிடிஐ

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருப்புப் பணத்தை ஒழிப்பதற் காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், மீண்டும் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என கூறி யுள்ளார். இது புதிராக உள்ளது. அதிக மதிப்பு கொண்ட 2,000 ரூபாய் நோட்டை வெளியிட்டால் எப்படி கருப்புப் பணம் உருவாவதை ஒழிக்க முடியும். இது கருப்பு பணத்தை மேலும் பதுக்கவே உதவும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

கருப்புப் பண ஒழிப்பை காங்கிரஸ் ஆதரிக்கும். ஆனால் மத்திய அரசின் இந்நடவடிக்கை யால் சாதாரண பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT