இந்தியா

கேரளத்தில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் வெடிப்புச் சம்பவம்: 12 பேர் காயம்

செய்திப்பிரிவு

கேரளாவில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

கேரள மாநில எர்ணாகுளத்தில் ஏல்லூர் எனும் பகுதியில் இருக்கிறது இந்துஸ்தான் பூச்சிக்கொல்லி லிமிடெட். இந்த ஆலையில், இன்று (புதன்கிழமை) 10 மணியளவில் டாங்கர் ஒன்றில் கார்ப்ன் டை சல்பைடு வேதிப் பொருளை நிரப்பும்போது திடீரென டாங்கர் வெடித்தது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். கணபதி என்ற தொழிலாளிக்கு 70% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் முகமது ஒய்.சரிபுல்லா விபத்துப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆலையில் நிலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டாங்கரில் எஞ்சியிருக்கும் வேதிப் பொருளை எவ்வித சேதமும் இல்லாமல் அப்புறப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT