இந்தியா

லோக்பால் அமைப்பதில் தாமதம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

பிடிஐ

லோக்பால் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலை மையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் ஆஜராகி வாதிடும்போது, “நீண்ட போராட்டத்துக்குப் பிறகு லோக் பால் சட்டம் இயற்றப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றார். லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றம் கடந்த 2014-ல் இயற்றிய போதிலும் மத்திய அரசு இதுவரை லோக்பால் அமைக்காததற்கு நீதிபதிகள் ஏமாற்றம் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT