இந்தியா

உத்தராகண்டில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ரிஷிகேஷ்: உத்தராகண்டில் பேருந்து பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்துக்​குள்​ளான​தில் 9 பேர் உயி​ரிழந்​தனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்​வாரில் இருந்து நேற்று அதி​காலை சமோலி மாவட்டத்​தில் உள்ள கர்​ணபிர​யாக் நகருக்கு பேருந்து ஒன்று புறப்பட்​டது. இதில் டெல்​லி, பிஹார், அசாம், மேற்​கு​வங்​கம் மாநிலங்​களைச் சேர்ந்த 35-க்​கும் மேற்​பட்​டோர் பயணம் செய்தனர்.

புறப்​பட்ட சுமார் 1 மணி நேரத்​துக்கு பிறகு ரிஷிகேஷ்-பத்​ரி​நாத் தேசிய நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு பாலத்​தில் சென்று கொண்டிருந்​த​போது பேருந்து திடீரென ஓட்​டுநரின் கட்டுப்பாட்டை இழந்​தது. இதனால் தறிக்​கெட்டு ஓடிய பேருந்து பாலத்​தில் இருந்து 100 மீட்டர் ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இந்த விபத்​தில் 9 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். 25 பேர் படுகா​யம் அடைந்​தனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்​ததும் போலீ​ஸார் மற்​றும் மாநில பேரிடர் மீட்​புக் குழு​வினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று தீவிர மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். படு​கா​யம் அடைந்த 25 பேரும் மீட்​கப்​பட்டு ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்க்​கப்​பட்​டனர். அங்கு அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

விபத்து குறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். முன்​ன​தாக, நேற்று முன்​தினம் மாலை ருத்ரபிர​யாக் மாவட்​டத்​தில் உள்ள பன்​ஸ்​வா​ரா-கந்​தாரா சாலையில் சென்று கொண்​டிருந்த கார் ஒன்​று, திடீரென ஓட்டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்து சாலை​யோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்​ததில் 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT