பிரேன் சிங், பெமா காண்டு

 
இந்தியா

பிரேன் சிங், சாம்ராட் சவுத்ரி உட்பட பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிற கட்சிகளில் இருந்து பாஜக​வில் இணைந்த பலரும் முதல்​வர், துணை முதல்​வர் உள்​ளிட்ட முக்​கிய பொறுப்புகளைப் பெற்​றுள்​ளனர். அந்தப் பட்​டியலில் பிஹார் முதல்​வ​ராகப் பதவி​யேற்ற சாம்​ராட் சவுத்​ரி​யும் இணைந்துள்ளார்.

சாம்ராட் சவுத்ரி முதலில் லாலு பிர​சாத்​தின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்​சி​யில் கடந்த 1990-ம் ஆண்​டு​களில் அரசி​யலைத் தொடங்​கினார். அப்​போது முதல்​வ​ராக இருந்த ராப்ரி தேவி​யின் அமைச்​சர​வை​யில் அமைச்​ச​ராக இருந்​தார். பின்​னர் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளத்​தில் 2014-ல் இணைந்து அமைச்சரானார். கடந்த 2017-ல் பாஜக​வில் இணைந்​தார். முதலில் சட்​டமன்ற மேலவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த சவுத்​ரி, பின்​னர், மாநில பாஜக தலை​வ​ரா​னார். நிதிஷ்கு​மார் அரசில் துணை முதல்​வ​ராக இருந்த சாம்​ராட், இப்​போது முதல்​வ​ராக​வும் பொறுப்​பேற்​று​விட்​டார். ஆர்​எஸ்​எஸ் பின்​னணி இல்​லாத சாம்​ராட் பாஜக.​வில் சேர்ந்து முதல்​வ​ராகி இருக்​கிறார்.

இது​போல், பாஜக​வின் நேரடி அரசி​யல் பின்​னணி எது​வுமின்றி மற்ற கட்​சி​யில் இருந்து வந்​தவர்​களில் இது​வரை 9 பேரை முதல்வர்​களாக நியமித்​துள்​ளது பாஜக. இந்தப் பட்​டியலில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் உள்ளார். இவர் காங்​கிரஸில் இருந்து 2015-ல் பாஜக​வில் இணைந்​தவர். அசாமில் தருண் கோகோய் தலை​மையி​லான காங்​கிரஸ் அரசில் அமைச்​ச​ராக​வும் ஹிமந்த பிஸ்வா பணி​யாற்​றி​யுள்​ளார். கடந்த 2016-ல் மீண்​டும் வந்த பாஜக ஆட்​சி​யின் அமைச்​ச​ராக இருந்​தவர், 2021 தேர்​தல் வெற்​றிக்கு பின் முதல்​வ​ராகி விட்​டார்.

கடந்த 2016-ல் பாஜக அசாமில் தனது முதல் ஆட்​சியை அமைத்தபோது, சர்​வானந்த சோனோ​வால் முதல்வரானார். இவரும் பாஜக, ஆர்​எஸ்​எஸ் பின்​னணி இல்​லாமல், ‘அனைத்து அசாம் மாணவர் சங்​கம்' கட்​சி​யில் இருந்து வந்​தவர். பின்​னர் ‘அசாம் கண பரிஷத்' கட்​சி​யில் இணைந்த சோனே​வால், 2011-ல் பாஜக​வில் இணைந்தார்.

மணிப்​பூரின் அரசி​யல் மாற்​றத்​தால் 2017-ல் அமைந்த பாஜக ஆட்சி​யின் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றார் என்​.பிரேன் சிங். இவர், ‘ஜன​நாயகப் புரட்​சிகர மக்​கள் கட்​சி'யைச் சேர்ந்​தவர். பிறகு காங்கிரஸ் ஆட்​சி​யில் அமைச்​ச​ராக​வும் இருந்​தார். 2016-ல் காங்கிரஸ் கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் சேர்ந்​தார். 2022-ல் மீண்டும் முதல்வரான பிரேன் சிங், மணிப்​பூரில் ஏற்​பட்ட வன்முறைச் சம்​பவங்​களால், 2025-ல் பதவி​யில் இருந்து விலக வேண்​டிய சூழல் ஏற்​பட்​டது.

பிரேன் சிங்​குக்​குப் பதில் யும்​னம் கேம்​சாந்த் சிங்கை முதல்​வ​ராக நியமித்​தது பாஜக. இவரும் பாஜக, ஆர்​எஸ்​எஸ் பின்​னணி இன்றி 2002-ல் பிரேன் சிங்​குடன் இணைந்து ‘ஜன​நாயகப் புரட்​சிகர மக்கள் கட்​சி' தொடங்​கிய​வர். 2013-ல் பாஜக​வில் இணைந்​தார் கேம்​சாந்த் சிங். இந்த முதல்​வர்​கள் பட்​டியலில், அருணாச்​சலில் பெமா காண்​டு, திரிபு​ரா​வில் மாணிக் சஹா ஆகியோ​ரும் இடம் பெற்​றுள்​ளனர்.

அதே​போல் பிற கட்​சிகளில் இருந்து வந்து பாஜக.​வில் உயர் பதவி பிடித்​தவர்​களில் கர்​நாட​கா​வின் பசவ​ராஜ் பொம்​மை, ஜார்க்கண்டின் அர்​ஜுன் முண்டா, உ.பி. துணை முதல்​வர் பிரிஜேஷ் பாதக் ஆகியோ​ரும் அடங்​கு​வர்.

SCROLL FOR NEXT