இந்தியா

ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம் இரும்பு ஆலை​யில் நேற்று மாலை ஏற்​பட்ட தீ விபத்​தில் 9 தொழிலா​ளர்​கள் சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 11 பேர் படு​காயமடைந்​தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது.

விசாகப்​பட்​டினத்​தில் உள்ள இரும்பு தொழிற்​சாலை​யில் ஷிப்ட் அடிப்​படை​யில் நூற்​றுக்​கணக்​கான தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், நேற்று மாலை சரி​யாக 4.15 மணிக்கு, எஸ்​எம்​எஸ் -2 கிடங்​கில் இருந்து எஸ்​டிசி - 3 க்கு 1500 டிகிரி வெப்​பத்​தில் உருக்​கிய இரும்பு குழம்பை ராட்சத பக்​கெட் மூலம் இடமாற்​றும் பணி நடந்து கொண்​டிருந்​தது. அப்​போது யாருமே எதிர்​பா​ராத வகை​யில் அந்த இரும்பு பிழம்பு வெடித்​துச் சிதறியது.

இந்த கோர விபத்​தில் அப்​பா​ராவ், பிர​பாகர் ராவ், கிருஷ்ணா, ரமணா, அப்​பல் ராவ், த்ரி​நாத், குமார் மற்​றும் அடை​யாளம் தெரியாத இரு​வர் என மொத்​தம் 9 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். அதே நேரத்​தில் தீப்​பிழம்பு உருகி விழுந்து மேலும் 11 பேர் படு​கா​யம் அடைந்​தனர். அவர்​கள் அனை​வரும் விசாகப்பட்​டினம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அங்கு அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் இரு​வரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ள​தால் உயிரிழப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது. சம்பவ இடத்​திற்கு தீயணைப்பு படை​யினர், போலீ​ஸார் விரைந்து சென்று தீயை கட்​டுப்​படுத்​தினர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்​வர் பவன் கல்​யாண், அமைச்​சர் லோகேஷ் ஆகியோர் ஆழ்ந்த இரங்​கல்​களை தெரி​வித்து உள்​ளனர். காயமடைந்​தோருக்கு உயர் சிகிச்சை அளிக்​கும்​படி அதிகாரிகளுக்கு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உத்​தர​விட்டு உள்ளார்.

ஆந்​திர உள்​துறை அமைச்​சர் அனிதா சம்பவ இடத்​துக்கு நேரில் சென்று ஆய்வு செய்​தார். மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோருக்கு ஆறு​தல் கூறி​னார். உயி​ரிழந்​தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​தார். இந்த விபத்து குறித்து உயர்​நிலை வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வருகிறது.

SCROLL FOR NEXT