இந்தியா

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்தில் 9 பேர் உயி​ரிழப்பு

செய்திப்பிரிவு

நொய்டா: டெல்லியிலிருந்து தனி​யார் பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் இரவு சுமார் 35 பயணி​களு​டன் உத்தர பிரதேச மாநிலம் மஹோபா நோக்கி புறப்​பட்​டது. இரவு 11:30 மணி​யளவில் பேருந்து கிரேட்டர் நொய்டா அருகே சென்​று​ கொண்​டிருந்​த​போது, ஓட்​டுநர் இருக்​கைக்கு அரு​கில் திடீரென தீப்​பிடித்​தது.

இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் சில பயணி​கள் அவசர​மாக குதித்து உயிர் தப்​பினர். எனினும், தீயில் சிக்கி ஒரு பெண் உட்பட 9 பயணி​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்​துள்ள போலீ​சார், தப்​பியோடிய ஓட்​டுநர் மற்​றும் நடத்​துநரை தேடி வரு​கின்​றனர்.

பிரதமர் மோடி இரங்கல்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்​தில் ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துள்ளார். மேலும், பிரதமர் தேசிய நிவாரண நிதியி​லிருந்து உயி​ரிழந்​தவர்​களின் வாரிசு​தா​ரர்​களுக்குத் தலா ரூ.2 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000-​மும் நிவாரணம் வழங்​கப்​படும்​ என்​று அவர் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT