பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வரும் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடக்கவுள்ள ஹார்ட் ஆப் ஏசியா உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமருக்கான வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர் பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறும் போது, ‘‘பாகிஸ்தான் அரசிடம் இருந்து இது தொடர்பான தகவல் அதிகாரபூர்வமாக கிடைத் துள்ளது. அதில் சர்தாஜ் அஜிஸ் பங்கேற்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளது’’ என்றார்.
இம்மாநாட்டில் பிரதமர் மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் சிறப்புரையாற்றுகின்றனர். மொத்தம் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்த சர்தாஜ் அஜிஸ், ‘‘இந்தியா புறக் கணிப்பில் ஈடுபட்டதால் பாகிஸ் தானில் நடக்கவிருந்த சார்க் உச்சி மாநாடு கிடப்பில் போடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அப்படி யல்ல. இந்தியாவில் நடக்கும் ஹார்ட் ஆப் ஏசியா உச்சிமாநாட் டில் பங்கேற்கும். இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க வாய்ப்பு அமையும்’’ என்றார்.