இந்தியா

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளியுங்கள்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஸ்வந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வு கூறியதாவது:

டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதை அவசர நிலையாகக் கருத வேண்டும். டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களாலும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள், செங்கல்சூளை களில் ஆய்வு நடத்தப்பட்டு காற்று மாசு தடுக்கப்பட வேண்டும். வேக்கம் கிளீனர் மூலம் 5 மாநில அரசுகளும் சாலைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டு கள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் தடை விதிப் பதில் டெல்லி அரசு கண்டிப்புடன் செயல்பட வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படு கின்றன. இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை அந்த மாநில அரசு தடுக்க வேண்டும்.

இவ்வாறு பசுமைத் தீர்ப்பாய அமர்வு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT