இந்தியா

சமாஜ்வாதியில் ராம்கோபால் யாதவ் மீண்டும் சேர்ப்பு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அகிலேஷின் ஆதரவாளரான ராம் கோபால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ராம்கோபால் யாதவ் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக முலாயம் சிங் நேற்று அறிவித்தார். மாநிலங் களவை சமாஜ்வாதி தலைவர், தேசிய பொதுச்செயலர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் ராம்கோபால் யாதவ் தொடர்வார் என்று முலாயம் சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT