இந்தியா

கன்னட திரைப்பட படப்பிடிப்பில் விபரீதம்: ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த சண்டை நடிகர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

இரா.வினோத்

பெங்களூரு அருகே கன்னட திரைப்பட படப்பிடிப்பின் போது ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த 2 நடிகர்கள், நீரில் மூழ்கி பலியாயினர்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் மாகடி அருகே திப்ப கொண்டனஹள்ளி ஏரி உள்ளது. பெங்களூருவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த ஏரியில் நேற்று காலை கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்கும் 'மஸ்திகுடி' திரைப்படத்தின் படப் பிடிப்பு நடைபெற்ற‌து. ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் துனியா விஜய் நடித்த காட்சிகளை இயக்கு நர் நாகசேகர் ப‌டமாக்கினார்.

இதைத் தொடர்ந்து துனியா விஜய், வில்லன் நடிகர்கள் அனில், உதய் ஆகியோருடன் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மூவரும் சுமார் 100 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்து நீச்சல் அடித்து கரை சேர்வது போன்ற காட்சிகளை படமாக்க நாகசேகர் முடிவு செய்தார்.

எனவே, பிற்பகல் 3 மணி அளவில் துனியா விஜய், அனில், உதய் ஆகிய மூவரும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில் துனியா விஜய் மட்டும் நீரில் நீந்தி கரையை அடைந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அனில், உதய் ஆகிய இருவரும் கரைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் மற்றும் சண்டை கலைஞர்கள் உடனடியாக நீரில் குதித்து இருவரையும் தேடினர்.

பெங்களூரூ அருகே நடந்த கன்னட படப்பிடிப்பின் போது சண்டை நடிகர்கள் ஹெலிகாப்டரிலிருந்து ஏரியில் குதித்த காட்சிகள்.

நீண்ட நேரம் தேடியும் அவர் களைக் கண்டுபிடிக்க முடியாத தால் இது தொடர்பாக போலீஸா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் 3 படகுகள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராம்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திர குப்தா சம்பவ இடத்துக்கு வந்து, மஸ்திகுடி திரைப்பட குழுவினரி டம் விசாரணை நடத்தினார். இதையடுத்து மஸ்திகுடி திரைப் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடு இல்லை

படப்பிடிப்பின்போது நடிகர் கள் இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கன்னட திரை யுலக வட்டாரத்தில் விசாரித்த போது, “உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்படாமல் ஆபத்தான காட்சிகள் படமாக்கப்பட்டது. கதா நாயகன் துனியா விஜய் மட்டும் கவச உடை அணிந்து இருந்தார். அணில், உதய் ஆகிய இருவரும் சட்டை அணியாமலே ஹெலிகாப் டரில் இருந்து குதித்துள்ளனர்.

நீண்ட நேரம் அவர்கள் வெளியே வராமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் படகு மூலம் மீட்க முயற்சித்துள்ளனர். அந்த வேளை யில் படகு பழுதானதால் உரிய நேரத்தில் சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் சரிசெய்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள் இருவரும் நீரில் மூழ்கி, சேற்றில் புதைந்திருக்கலாம் என சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT