இந்தியா

மோடி உருவத்துடன் ஆடை: நடிகை மீது வழக்கு பதிவு

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் கொண்ட ஆடையை உடுத்திய, பாலிவுட் டின் சர்ச்சை நடிகை ராக்கி சாவந்துக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா பயணம் செய்தபோது, பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஆங்காங்கே அச்சடிக்கப்பட்ட அரைகுறை ஆடையை அணிந்து சென்றார். வில்லங்கமான இந்த புகைப்படங்கள், இணைய தளத்தில் உலவி வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரஜீத் திவாரி, இவ்விவகாரத்தை கையில் எடுத்து, பிரதமரை இழிவுபடுத்தியதாக நடிகை சாவந்துக்கு எதிராக கன்குரோலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், ஆபாச செயல்களில் ஈடுபட்ட தாகவும், பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதை செய்ததாகவும் நடிகை ராக்கி சாவந்துக்கு எதிராக கன்குரோலி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT