காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் சனிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை பிரிவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "இன்று (சனிக்கிழமை) காலை, குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வாகனத்தில் இருந்த வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது" என்றார்.
கடந்த 36 மணி நேரத்தில் ஹண்ட்வாரா பகுதியில் நடத்தப்பட்டுள்ள இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.