இந்தியா

சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை: இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி

இரா.வினோத்

பெங்களூரு: சென்னை மைசூரு இடையேயான‌ வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனைய சேவையை பிரதமர் நரேந்திர‌ மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர‌ மோடி இன்று காலை பெங்களூருவுக்கு வருகிறார். பெங்களூரு நகர ரயில் நிலையத்துக்கு சென்று காலை 11 மணியளவில் பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் நாட்டின் 5வதும், தென்னிந்தியாவின் முதலாவதுமான சென்னை-மைசூரு இடையேயான‌ வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் 108 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் வெண்கலச் சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக ரூ.5 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள 2வது முனையத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT