புதுடெல்லி: டெல்லி அரசு புதிய மதுக்கொள்கையை கொண்டுவந்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதனிடையே, புதிய கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், பெர்னாட் ரிக்கார்ட் என்ற மதுபான நிறுவனத்தின் பொது மேலாளர் பினோய் பாபு மற்றும் அரவிந்தோ பார்மா முழுநேர இயக்குநர் சரத் சந்திர ரெட்டி ஆகிய இருவரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். டெல்லி அரசின் புதிய மதுக்கொள்கையை உருவாக்கியதில் இந்த இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.