சஞ்சய் ராவத் 
இந்தியா

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பில் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதி முடிந்தது.

இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், அதே தினத்தில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

அதன்படி நேற்று சஞ்சய் ராவத் தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் ராவத் துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சுமார் மூன்றரை மாத காலம் சிறையில், சஞ்சய் ராவத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT