ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் பகுதியில் உள்ள கெர்னி கிரமபகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தலைமை ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் கைத் துப்பாக்கிகளை கொண்டு இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தொடர்ந்து நடந்து வரும் இந்த துப்பாக்கி சூட்டுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக இந்த துப்பாக்கி சண்டையை பாகிஸ்தான் வீரர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது,