ஜம்மு காஷ்மீரில் நடந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 94 சதவீத மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத தளபதி புர்ஹான் வானி கடந்த ஜூலை 8-ம் தேதி கொல்லப்பட்ட நாள் முதலாக அம்மாநிலம் முழுவதும் வன்முறை நீடித்து வருகிறது. புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகள் தினசரி பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்படைந் தது. கடைகள், வர்த்தக நிறு வனங்கள், பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டன.
இந்நிலையில் திட்டமிட்டபடி 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கள் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் இதற்காக 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்தத் தேர்வில் மொத்தம் 94.53 சதவீத மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதியுள்ளனர். வன்முறை காரணமாக 4 மாதங் களுக்கு மேலாக பள்ளிகள் மூடப் பட்டிருந்தால், இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் இருந்து 50 சதவீத கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. எஞ்சிய 50 சதவீத பாடத்திட்டத்துக்கான தேர்வுகள் 2017, மார்ச்சில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் நடக்காவிட்டாலும், மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அதிக ஆர்வம் காண்பித்திருப்பது மாநில அரசை மிகுந்த மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கல்வீச்சு போன்ற வன்முறைகளை கைவிட்டு, பொதுமக்களும், இளம் சமுதாயத்தினரும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி விட்டனர் என்பதை தான் இந்த தேர்வுகள் சுட்டிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கல்வியாளரான டாக்டர் சிம்ரித் கஹ்லோன் கூறும்போது, ‘‘ஹூரியத் மாநாட்டு கட்சியின் வெற்று தோரணைகளும், தவறான நிலைப்பாடும் இதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. மக்களும், இளம் சமுதாயத்தினரும் அமைதி, வளர்ச்சி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது’’ என்றார்.
இதற்கிடையில் காஷ்மீரின் பல் வேறு பகுதிகளில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால், சாலை களில் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. கடை கள், வர்த்தக நிறுவனங்களும் ஆங் காங்கே திறக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.