ஜம்மு- காஷ்மீர் எல்லையில், அத்துமீறி நுழைய முற்பட்ட தீவிரவாதிகள் சதித் திட்டம் எல்லை பாதுக்காப்பு வீரர்களின் தாக்குதலால் முறியடிக்கப்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு- காஷ்மீரின் எல்லையில் ஹிரான்நகர் முகாம் அருகே தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தோடு தீவிரவாதி ஒருவரையும் சுட்டு வீழ்த்தினர்.
இந்திய தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் தீவிரவாதிகள் சிலர் பாகிஸ்தான் எல்லைப் பகுதி நோக்கி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட நபரின் உடல் கைப்பற்றப்பட்டது. அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஜம்மு எல்லையில், தீவிரவாதிகள் அத்துமீறல் முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.