மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது, சமாஜ்வாதி கட்சி எம்பி நரேஷ் அகர்வால் பேசியதைக் கேட்டு பிரதமர் மோடி வாய்விட்டு சிரித்தார்.
மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு தொடர்பான விவாதம் நடைபெற்றபோது, சமாஜ்வாதி கட்சி எம்பி நரேஷ் அகர்வால் பேசும்போது, “ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைக்கூட பிரதமர் மோடி நம்பவில்லை என தகவல் வெளியானது. ஒருவேளை ஜேட் லிக்கு இதுபற்றி முன்கூட்டிய தெரிந்திருந்தால், அவருக்கு என்னைத் தெரியும் என்பதால் என் னிடம் இந்தத் தகவலை ரகசிய மாகக் கூறியிருப்பார்” என்றார்.
இதைக்கேட்டதும் பிரதமர் நரேந்திர மோடியும், அருண் ஜேட்லியும் வாய்விட்டு சிரித்தனர்.
இதையடுத்து அகர்வால் மேலும் பேசும்போது, “ரூபாய் நோட்டு விவகாரத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மோடி தெரிவித்திருந்தார். கவலை வேண்டாம், குறைந்தபட்சம் சமாஜ்வாதி கட்சி ஆளும் உ.பி.யில் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார். இதைக்கேட்ட பிரதமர் மோடி மீண்டும் சிரித்தார்.