அதிநவீன பிரமோஸ் ஏவுகணை ஒடிசா கடற்கரைப் பகுதியிலிருந்து வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்டது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) துறையால், நகரும் ஏவுகலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை ஏவிப் பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 300 கிலோ எடையுள்ள வெடிபொருளைத் தாங்கியபடி, 290 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் திறனுடையது.