இந்தியா

வேளாண் தேவையை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் பணத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

பிடிஐ

கிராமப்புறங்களில் பணத் தட்டுப் பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:

இந்தாண்டு வருமான வரி மூலம் ரூ.8 லட்சம் கோடி வசூலாகும். மறைமுக வரிகளின் மூலம், ரூ.8.5 லட்சம் கோடி கிடைக்கும். ஆனால் நாட்டு நிர்வாக செலவினங்களுக்கு இது போதாது. ரூ.4 முதல் 5 லட்சம் கோடி வரை பற்றாக்குறை ஏற்படும்.

இதேபோல தான் ஆண்டு தோறும், ரூ.4 முதல் 5 லட்சம் கோடி வரை நாடு கடன் வாங்குகிறது. ஆனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் மூலம் நேர்மை யாக வரி செலுத்தும் நடைமுறை நாட்டில் அமலுக்கு வந்தால், கடன் வாங்க வேண்டிய தேவையில்லை.ஒருவேளை கடன் வாங்கினாலும், அதை வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற முன்னேற்றம் போன்றவற்றுக்காக செலவிடலாம்.

இன்றைக்கு ஒவ்வொரு நேர் மையான குடிமகனும், தனது நேர் மைக்கு ஒரு மதிப்பு கிடைத் திருப்பதை உணரலாம். இது காலப்போக்கில், நாட்டின் அதி காரப்பூர்வ பொருளாதாரத்தைப் பெரிதாக்கி, நிழல் பொருளா தாரத்தைக் குறைத்துவிடும்.

வளர்ந்த நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் என்ற அளவிலேயே கரன்சியின் மதிப்பு இருக்கும். ஆனால் இந்தியாவில் இது 12 சத வீதமாக உள்ளது. பெரும்பாலான வர்த்தகம் ரொக்கத்தின் மூலம் நடப்பதையும், வங்கியியல் நடைமுறைகளுக்கு அப்பால் பணப் பரிவர்த்தனைகள் நடப்பதையுமே இது காட்டுகிறது.

இதன் விளைவு, கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள், வரி ஏய்ப்பு மற்றும் அதையொட்டிய மோசடிகளை உருவாக்கிவிடுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது, வறுமை, வறுமை ஒழிப்பு மற்றும் ஏழை களுடன் நேரடியாக தொடர்புடை யதாகும்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாற்று கரன்சி மக்களை சென்றடைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மறு மதிப்பு நடவடிக்கைகள் குறிப் பிட்ட நிலையை எட்டியதும், கட்டுப் பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வோம்.

அதுவரை சில நாட்களுக்கு சிரமமாக தான் இருக்கும். நகர்ப் புறங்களில் நிலைமை சீரடைந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்படும். ரபி பருவத்தில் விவசாயிகளிடம் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வழி செய்யப்படும். இதுதொடர்பாக விரைவில் புதிய முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு ஜேட்லி பேசினார்.

எனக்கே தெரியாது

500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படும்போது, பாஜகவின் முக்கிய நபர்களுக்கு மட்டும் முன்கூட்டியே ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறியதற்கு அருண் ஜேட்லி பதில் அளிக்கும்போது,

‘இப்படி ஒரு நடவடிக்கை எடுக் கப்படும் என்பது, நாட்டின் நிதி யமைச்சருக்கே, அதாவது எனக்கே தெரியாது’ என்றார்.

SCROLL FOR NEXT