இந்தியா

உ.பி.யில் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் மரணம்

ஒமர் ரஷித்

உ.பி. மாநிலம் பரேலி மாவட்டத்தில் வங்கியில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் மரணமடைந்தார்.

காலிக் ஹசன் என்ற 56 வயது ஆட்டோ ஓட்டுநர் வரிசையில் காத்திருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக லக்னோ டிஜிபி தெரிவித்தார்.

இதனையடுத்து உள்ளூர் இயக்கமான ரசா ஆக்சன் கமிட்டி மற்றும் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலைமறியல் செய்தனர். அவர்கள் காலிக் ஹசன் மரணத்திற்கு நிவாரணம் அளிக்க கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் செய்தனர். இவர்கள் ஆர்பாட்டத்தினால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிறகு மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்தி நிவாரணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்த பிறகு அமைதி ஏற்பட்டது.

SCROLL FOR NEXT