500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் வரும் திங்கள் கிழமை (நவ. 28) கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அறிவித்துள்ளது.
எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் வைக்கம் விஸ்வன் இதனை நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடையடைப்பு போராட்டம் காலை முதல் மாலை வரை நடைபெறும். பிரதமர் மோடியின் ஆணவப் போக்கை கண்டிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.
பண மதிப்பு நீக்க விவகாரத் தால் கேரளாவில் கூட்டுறவுத் துறை யில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் விளக்கு வதற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு விரும்பியது. இதற்கு பிரதமர் மோடி அனுமதி அளிக்க வில்லை. ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. 2 நாட்களுக்கு பிறகு, இந்த நோட்டுகளை தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவோ, மாற்றித் தரவோ கூடாது உத்தர விடப்பட்டது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியது.
கேரளாவில் கூட்டுறவு வங்கி களில் 1.27 லட்சம் கோடி டெபாசிட் தொகை உள்ளதாக கூட்டுறவு அமைச்சர் ஏ.சி.மொய்தீன் கூறி யுள்ளார்.