பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேயூ (PayU) பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூரு மெட்ரோவைப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட் எடுப்பதற்கு, பயண அட்டையை ரீசார்ஜ் செய்வதற்கு இனி கவுண்டருக்குச் செல்லத் தேவையில்லை. வாட்ஸ் மூலம் இவற்றைச் செய்துகொள்ளலாம். 8105556677 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக ‘Hi’ என்றுஅனுப்பியோ அல்லது மெட்ரோ நிலையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூ கோர்டை ஸ்கேன் செய்தோஇ-டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இதில் பயண அட்டைக்கும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.