இந்தியா

டிசம்பர் 30 வரை ஏடிஎம் கட்டணம் ரத்து

செய்திப்பிரிவு

டெபிட் கார்டுகளை அந்தந்த வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறையும் பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் இலவசமாக பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.20 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.

தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களின் பணத் தேவைக்காக பல் வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்களைத் தேடி அலை கின்றனர். பலமுறை டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

எனவே மக்களின் நலன் கருதி கடந்த 10-ம் தேதி முதல் வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை ஏடிஎம் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த உத்தரவின் நகல் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT