இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவரும், சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமருமான சர்தார் வல்லபாய் படேல், குஜராத் மாநிலம் நடீயாத்தில் 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிறந்தார்.
இந்தியாவின் இரும்பு மனிதராக கருதப்படும் அவரின் 141-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி, படேல் சவுக் பகுதியில் உள்ள படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியா கேட்டில் நடைபெற்ற விழாவில், படேலை நினைவு கூரும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையையும் மோடி வெளியிட் டார். படேலின் பெருமையை விளக்கும் வகையில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் பிரகதி மைதானத்தில் வரும் 6-ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற ஒற்று மைப் பேரணியை கொடியசைத் துத் தொடங்கி வைத்தார் மோடி.
இந்திரா காந்திக்கு அஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை யொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செய்தி வெளியிட்டார்.