இந்தியா

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து - மகளை காப்பாற்றி உயிர் துறந்த தந்தை

செய்திப்பிரிவு

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மோர்பி நகரில் மச்சு ஆற்றில் மீது அமைந்திருந்த தொங்கு பாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் மிக மோசமான பாலம் இடிந்து விழுந்த விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த அசோக், அவரது மனைவி பாவ்னாபென், 7 வயது மகள் ஆகியோர் மோர்பியின் தொங்கு பாலத்துக்கு சென்றனர்.

பாலம் அறுந்ததில் 3 பேரும் நதியில் விழுந்தனர். எனினும், தனது தோளில் அமர்ந்திருந்த மகளை அசோக் உறுதியாக பிடித்திருந்தார்.

நதியில் மோதிய வேகத்தில் அவரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர். மகள் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மீட்புப் படை வீரர்கள் குழந்தையை மீட்டு தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT