கான்பூர் ரயில் விபத்தில் பலியானவர்கள் பற்றிய விவரம் அறிய சிறப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உ.பி.யில் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தாகி 65 பேர் பலியாகினர். 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து இன்னும் முழுமையாக பயணிகள் மீட்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் அறிய 10 சிறப்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள், இந்தூர் - 0741 1072, உஜ்ஜைன் - 0734 2560906, ராட்லம் - 07412 1072, ஒராய் - 05162 1072, ஜான்சி- 0510 1072, போக்ராயா - 05113270239 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறியலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.