உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராக, நடிகை ராக்கி சாவந்த்தை வேட் பாளராக நிறுத்தப்போவதாக, இந்திய குடியரசுக் கட்சித் தலை வரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
இதுகுறித்து அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவே இந்திய குடியரசுக் கட்சி உள்ளது. எனவே, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்தே நாங்கள் போட்டியிடுவோம்.
கூட்டணி இல்லை என்றால், இந்தியக் குடியரசுக் கட்சி தனித்தே களமிறங்கும். 403 தொகுதிகளில் 200-க்கும் அதிகமான வேட்பாளர் களைக் களமிறக்குவோம். உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மீது தலித் சமூக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தலித்துகளை வழிநடத்த மாற்று சக்தி வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சிலகாலமாக, தேர்தலை எதிர் கொள்வதற்கு மாயாவதி தயங்கு கிறார். உத்தரப் பிரதேசத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா எனத் தெரியவில்லை.
ஒருவேளை மாயாவதி போட்டி யிட்டால், அவருக்கு எதிராக எங்களின் மகளிரணித் தலைவி ராக்கி சாவந்த்தை வேட்பாளராக களமிறக்குவோம்.
இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.