இந்தியா

மதமாற்றத்தில் ஈடுபட்ட தொண்டு நிறுவனம் மீது கடும் நடவடிக்கை - அமித் ஷா தகவல்

செய்திப்பிரிவு

சூரஜ்கண்ட்: ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் நடந்த மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு அரசியல் சாசனம் வழங்குகிறது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, இன்று பல சட்டங்கள் எல்லை இல்லாததாக கொண்டுவரப்பட்டுள்ளன.

அன்னிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் மத்திய அரசு சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி, பல தொண்டு நிறுவனங்கள் தேச விரோத செயல்களிலும், மத மாற்றங்களிலும், வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.

இதனால் அன்னிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில், மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்மூலம் தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு, வெளிநாட்டு நிதி தவறாக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரும் காலங்களிலும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமித்ஷா கூறினார்.

SCROLL FOR NEXT