இந்தியா

குஜராத் விவசாயிகளுக்கு ரூ.630 கோடி நிவாரண நிதி

செய்திப்பிரிவு

அகமதாபாத்: தென்மேற்கு பருவமழையின் போது குஜராத்தில் பலத்த மழைபெய்தது. இதன் காரணமாக 14 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகின. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பூபேந்திர படேல் உறுதி அளித்திருந்தார்.

இதன்படி குஜராத் விவசாயிகளுக்கு ரூ.630.34 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது. இதன்மூலம் 8 லட்சம் விவசாயிகள் பலன் அடைய உள்ளனர்.

ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்கப்படும்.அதாவது மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.13,500-ம், பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் ரூ.16,500-ம் வழங்கப்படும். அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு நிவாரண உதவி அளிக்கப்படும்.

சிறிய அளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும். விவசாயிகள் உடனடியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது

இந்நிலையில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளதால் மாநில பாஜக அரசு இப்போது நிவாரண நிதியுதவியை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

SCROLL FOR NEXT